technology

img

ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் 

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ரேட்மி நோட் வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் அதி சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. 
இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை, 778ஜி ஸ்னாப்டிராகன், 6 ஜிபி உள்ளக நினைவகம், 128 ஜிபி கூடுதல் நினைவகம், பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 8 எம்பி விரிவான கோணத்திற்கும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 32 எம்பி அளவை கொண்டிருக்கிறது. 5200 எம்ஏஎச் பாட்டரி வசதி, ஆன்டிராய்டு 11 ஓ.ஸ், டைப்-சி போர்ட் உள்ளிட்ட சிறப்பம்சங்களை ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5 ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

;